23.4.2012 உங்களை வியப்படைய வைக்கும்

Author: முகேஷ் .M // Category:
  1. கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின் புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும் பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.
    இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். 

    கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.

    உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.


    இந்த தளத்திற்கு செல்ல - Touch Effects

அந்தரத்தில் தொங்கும் அதிசய பாறை.!

Author: முகேஷ் .M // Category:
                                                                         


அந்தரத்தில் தொங்கும் அதிசய பாறை.!

பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்டத்தில் படாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசய ம். சவுதி அரேபியா வில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது.

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாறையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1989 ஆம் ஆண்டு இந்த அதிசயப் பாறையின் பின்புறத்திலிருந்தஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

இன்டர்நெட் அமைப்பில் மாற்றம்: ஐபிவி6

Author: முகேஷ் .M // Category:

இணையதளத்தின் வழியே நாம் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை பரிமாற முடியும். நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணினியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க் அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால் முகவரியும் தேவைப்படுகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை உலகளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.


இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை ஐபிவி4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு ஐபிவி6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.


இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும். ஐபிவி4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.


நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், ஐபிவி4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் ஐபிவி6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது. இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும் என தெரிகிறது.

விண்டோஸ் 7 பேக் அப்

Author: முகேஷ் .M // Category:

நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும்.இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர்.முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.


இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும்.


நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும்.பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.


முதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும்.

டவுன்லோட் செய்யுங்க INTERNET EXPLORER 9

Author: முகேஷ் .M // Category:
தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு “மிக மிக அழகான இணையம்’ என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கடந்த ஏழு மாதங்களில் 3 கோடியே 60 லட்சம் பேர், சோதனைத் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பதிப்பு 8 வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பதிப்பு 9 வெளியாகிறது.
பதிப்புகள் 7க்கும் 8க்கும் இடையே, இரண்டு ஆண்டுகள் ஐந்து மாத இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ன் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் இல்லை. இதுவரை சோதனைப் பதிப்பின் பயன்பாடு 0.6% என்ற அளவில் மட்டுமே உள்ளது.
இதுவரை வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களைக் காட்டிலும், காட்டப்படும் இணைய தளச் செய்திகளுக்கு இந்த பிரவுசர் அதிக இடம் தரும். விண்டோஸ் டாஸ்க் பாரில், இணைய தளங்களை “பின் அப்’ செய்திடலாம்.
இதன் மூலம் இணைய தளங்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் போலச் செயல்படலாம். ஏறத்தாழ விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ளது போல ஜம்ப் லிஸ்ட் போலச் செயல்படும். மேலும் இதன் மூலம், நாம் ஒரு இணைய தளத்தில் குறிப்பிட்ட தகவல் பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும். இயக்க செயல்முறைகளிலும் நிறைய மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
பிரவுசர் இயங்கி திரைக்கு வர மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு இந்த பிரவுசரில் பயன்படுத்தப்படும் சக்ரா (Chakra) எனப்படும் புதிய ஜாவா இன்ஜின் தான் காரணம். Chrome, Opera, Firefox, மற்றும் Safari பிரவுசர்களைக் காட்டிலும் இது வேகமாக இயங்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. இன்றைக்கு விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் 45.3% பேர் இன்னும் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 எட்டாக் கனிதான். இவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த இடைவெளியினை, மற்ற @பாட்டி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பிரவுசர்களை அமைத்து வருகின்றனர்.
இதன் சோதனைத் தொகுப்பு வந்த காலத்திற்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு மொத்தத்தில் 3% குறைந்துள்ளது. இந்த வேளையில் பயர்பாக்ஸ் பதிப்பு 4 பிரவுசரின் முழுத் தொகுப்பினை வெளியிட மொஸில்லா தயாராகி வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு9 வெளியீட்டிற்குக் காத்திருந்தது. நவம்பர் 2009க்குப் பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரின் பங்கும் 3% குறைந்தது. அப்போது பயர்பாக்ஸ் 24.7% பேரால் பயன்படுத்தப்பட்டது.
புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் http://download.cnet.com /83012007_42003127912.html என்னும் முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கணினி பாகங்கள் மற்றும் படங்கள்

Author: முகேஷ் .M // Category:
பாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்…
கணினி என்றால் என்ன?
உள்ளீடு (Input) -->
செயல் (Process) -->
வெளியீடு (Output)
விசைபலகை (Keyboard)

எண்பலகை (Numeric Keyboard)

நகலாக்கி (Scanner)

தொடுதிரை (TouchScreen)

அளவீடும் கருவிகள்
(Measurement Equipments)

ஒலி கருவிகள்
(Audio Device)

ஒலி, ஒளி கருவிகள்
(Video Device)

இன்னபிற…
மைய செயலகம்

(Central Processing Unit)
( மைய செயலகம் பல்வேறு கருவிகளின் தொகுப்பு, அவற்றை விரிவாக பின்பு பார்ப்போம்.)
திரை (Monitor)

அச்சு கருவி (Printer)

இன்ன பிற…
உள்ளீடு கருவிகளின் படங்கள்
விசைபலகை அளவீடும் கருவிகள்
keyboard measurement
எண்பலகை ஒலி கருவி
numeric keyboard mic
நகலாக்கி ஒலி, ஒளி கருவி
scanner video
தொடுதிரை
touch screen
மைய செயலகம்
cpu
வெளியீடு கருவிகளின் படங்கள்
crt monitor lcd monitorprinterlaser printer

20 நிமிடங்களில் WINDOWS XP இன்ஸ்டால் செய்யலாம் !

Author: முகேஷ் .M // Category:

நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது .


1 .முதலில் WINDOWS XP CD மூலமாக கணினியை பூட் செய்து பணியை தொடங்குங்கள்
2.சில படிகளுக்கு பிறகு NTFS அல்லது FAT முறையில் FORMAT செய்வதற்கான கட்டம் வரும் .தேவையான கட்டளையை கொடுத்து FORMAT செய்யுங்கள் .அதன் பிறகு CD ல் உள்ள FILE கள் அனைத்தும் COPY ஆகும் .COPY ஆகி முடிந்தவுடன் கணினி RESTART ஆகும் .
3.இனிதான் ஒரு சிறிய வேலை இருக்கிறது .கணினி RESTART ஆகி INSTALLATION PROCESS தொடர ஆரம்பித்ததும் SHIFT+F10 அழுத்துங்கள் .இப்போது COMMAND PROMPT விண்டோ திறக்கும் .அதில் Taskmgr என TYPE செய்து ENTER அழுத்துங்கள் .
4 .இப்போது TASK MANAGER திறக்கும் .TASK MANAGER ல் PROCESS TAB ஐ தேர்வு செய்யுங்கள் .அதில் setup.exe என்பதை RIGHT CLICK செய்து SET PRIORITY என்பதில் HIGH அல்லது ABOVE NORMAL என்பதை தேர்வு செய்யவும் .இப்போது ஒரு எச்சரிக்கை வரலாம் .அதை கண்டுகொள்ளவேண்டாம் .
5.இனி TASK MANAGER ஐயும் COMMAND PROMPT ஐயும் மூடிவிட்டு INSTALLATION ஐ தொடரலாம் .
இப்போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவான நேரத்தில் WINDOWS XP INSTALL ஆகிவிடும் .