Showing posts with label இன்டர்நெட்டில் செய்திகள்... Show all posts
Showing posts with label இன்டர்நெட்டில் செய்திகள்... Show all posts

60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது

Author: முகேஷ் .M // Category:
மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .

கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?



2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .

கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .
கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25 மணி நேரம் ஓடக்கூடிய 600 வீடியோ கிளிப்புகள் youtube தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .
கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .
கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன




டிஸ்கி :பிளாக்கர்கள் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .பிளாக்கர்களின் மன நலனை கருத்தில் கொண்டு கூகுள் அத்தகவலை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாமிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்

Author: முகேஷ் .M // Category:


இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது.

ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.

இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.

இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம்.

ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.

இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும்.

அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?

முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.

1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.

2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.

3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.

சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.

எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது.