Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts
Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts

புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

Author: முகேஷ் .M // Category:
  • குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
  • குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
  • கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
  • எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
  • வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
  • குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
  • குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
  • சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
  • சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
  • குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
  • கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
  • மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.
poultry_chicks

கோழிக் கொட்டகை அமைத்தல்

Author: முகேஷ் .M // Category:

நம் நாட்டில் திறந்தவெளிக் கோழி வளர்ப்பே பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் வர்த்தக ரீதியில் நல்ல இலாபம் பெற பண்ணை வீடுகள் அமைக்க வேண்டியதாகிறது. கோழிப் பண்ணை வீடுகள் நல்ல காற்றோட்டத்துடன், கோடைக்காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்க்காலங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கவேண்டும். வெப்பம் மிகுந்த நாடுகளில் பக்கங்கள் வடக்கு தெற்காக இருக்குமாறு கொட்டகை அமைக்கவேண்டும். அப்போது தான் சூரிய வெப்பம் கொட்டகைக்குள் விழாமல் தவிர்க்க முடியும். குளிர்ப்பிரதேசங்களில் அதிக சூரிய வெளிச்சத்தைப் பெற தெற்கு, தென்கிழக்காக கொட்டகை அமைத்தல் வேண்டும். அப்போது தான் சரியான காற்றோட்டம் கிடைக்கும். இளம் குஞ்சுகளை கோழிக் கொட்டகையிலிருந்து 45-100 மீ தொலைவில் அமைத்தால் தான் நோய் பரவுவதைக் குறைக்க இயலும். திறந்த வெளிக் கொட்டகை அமைப்பில் அகலம் 9 செ.மீ இருக்க வேண்டும். இடத்தின் வெப்பநிலையைப் பொறுத்து உயரத்தை மாற்றிக் கொள்ளலாம். சாதாரணமாக 2-4-3 மீ உயரம் வரை அமைக்கலாம். வீட்டினுள் வெப்பத்தைக் குறைக்க உயரத்தை அதிகப்படுத்தவேண்டும்.

poultry_housing
கோழிக் கொட்டகை
தேவையான வசதிகளுடன் பாதுகாப்பானதாகவும், நீண்ட நாள் தாங்கக் கூடியதாகவும் கோழிப்பண்ணை வீடுகள் இருக்கவேண்டும். தரை ஈரத்தைத் தாங்கக் கூடியதாக, எந்த வெடிப்பும், ஓட்டையோ இன்றி சுத்தம் செய்ய எளிதாக இருக்கவேண்டும். கூள தரை, சிலேட் தரை, சிலேட் – கூள தரை, கம்பி மற்றும் கூளத்தரை உண்டு. சுற்றுச் சுவர்கள் கூரையைத் தாங்கக் கூடியதாகவும், காற்றிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பதாகவும் இருத்தல் வேண்டும். கூரை அதிக பாரமின்றி ஈரத்தை எளிதில் உலர்த்துவதாக அமைக்கவேண்டும். கூரைகளில் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க அலுமினியம் பெயின்ட் (வண்ணப்பூச்சு கொண்டு பூசுதல் நன்மை பயக்கும். அதே போல் கூரை இருபுறமும் கீழே இறங்கியவாறு அமைத்தால் மழை நீர் தெரிப்பது குறையும். பக்கங்கள் இரண்டில் 1 பங்கு அல்லது 3ல் 2 பங்கு திறந்த வெளியாக அமைக்கலாம். அடை காக்கும் கொட்டிலில் உயரத்தின் பாதி அளவு பக்கங்கள் திறந்ததாகவும், இறைச்சி மற்றும் முட்டைக் கோழிகளில் 3ல் 2 பகுதி திறந்தவெளியாகவும் இருத்தல் அவசியம். மேலும் இந்தக் கொட்டகை அமைப்பானது நல்ல நீர்த்தேக்கமற்ற, வெள்ள பாதிப்பு ஏதுமின்றி எளிதில் சாலையை அடையுமாறு இடத்தில் இருப்பது சிறந்ததாகும்.


பயனுள்ள தொழில்கள் 1 - கோழி வளர்ப்பு

Author: முகேஷ் .M // Category:
கோழி வளர்ப்பு





பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
  • கூண்டு முறை / கொட்டகை முறை
  • ஆழ்கூள முறை
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.
CAGE SYSTEM














பயன்கள்
  • ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு இடத்தில் நிறைய கோழிகளை வளர்க்கலாம்.
  • பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க முடியும்.
  • சரியான வளர்ச்சியுற்ற உற்பத்திக் குறைந்த கோழிகளைப் பிரித்தெடுத்தல் எளிது.
  • இம்முறையில் தான் கோழிகள் அதன் முட்டை மற்றும் ஊண் உண்ணுதலைத் தடுக்க முடியும்.
  • இம்முறையில் சுத்தமான முட்டைகள் பெறப்படுகின்றன.
  • அழுத்தக் காரணிகள் குறைவு.
  • இரத்தக்கழிச்சல், குடற்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளின் நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்த முடியும்.
  • தீவனங்கள் அதிகம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
  • மிதவெப்பமண்டலப் பகுதிகளில் கோழி வளர்ப்பிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் கோழிகளை அமிழ்ந்தவை அல்லது மருந்தை தூவுவதற்கோ பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் அமிழ்த்துதல் நல்லதல்ல. மேலும் கோழியின் தலையை நனைப்பதும் தவிர்க்கப்படவேண்டும்.
  • மேலும் குஞ்சுகளை வளர்ந்த கோழிகளிடமிருந்து பிரித்து வளர்த்தல், கொட்டகை மற்றும் அனைத்து சாதனங்களையும் சுத்தமாக வைத்திருத்தல், பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் இருத்தல், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல், எலி மற்றும் பிற பறவைகளின் நடமாட்டத்தைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதோடு பயனற்ற பறவைகளை நீக்குதல் போன்றவையும் நல்ல பலன் தரக்கூடிய பராமரிப்பு முறைகளாகும்.
ஆழ்கூள முறை
இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
Poultry_Deep litter System















பயன்கள்
  • மூலதனம் குறைவு.
  • சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
  • இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது.
  • நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
  • உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
  • நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும்பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
  • கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
  • நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.
  • கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
  • ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
  • கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
  • தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
(ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.)
தனிமையில் வளர்த்தல்
வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.

கோழிகள்

கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.

கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை

இந்திய அரசு, பெங்களூர், மும்பை, புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.
இருக்க வேண்டிய எண்ணிக்கை

கோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு பகுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும்