அமேசான் காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடிகள்

Author: முகேஷ் .M // Category:
பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஓராண்டாக தீவிர முயற்சிக்கு பின் இந்த இந்திய பழங்குடியினரை அமேசான் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர். மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக, எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக அவ்வளவு ஏன் தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள் உள்ளனர். உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக வாழ்கிறார்கள். இவர்களை பாதுகாக்க அந்நாடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

பிரேசில் அரசு கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு தகவலை வெளியிட்டது, அது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இருக்காத பின்னே! வெளி உலகத்தின் தொடர்பே முற்றிலும் அற்று பொய் ஒரு கூட்டம் தனியே அமேசான் காடு பகுதியில், பேரு நாட்டின் எல்லை ஓரத்தில் வசித்து வருவதை கண்டறிந்து அதிகார பூர்வமாய் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

விமானம் மூலம் எடுத்த புகை படங்களின்ஆதாரமாக வைத்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது பிரேசில் அரசாங்கம்.


இவர்கள் தங்கள் குடிலை தாங்களே அமைத்துக்கொண்டு வாழும் அளவுக்கு நாகரீகம் அடைந்துள்ளனர். விமானத்தை பார்த்து ஏதோ தங்களை தாக்க வருவதாக எண்ணிக்கொண்டு வில் கம்பைகொண்டு எரிவதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.


பல ஆச்சர்யமூட்டும் தகவலும் உண்டு. புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் ஆடைகளை உடுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு பருத்தி ஆடைகளை நெய்ந்து அணியும் அளவுக்கு நாகரிகம் கொண்டவர்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர்.


பி பி சி தன் குழுவோடு போய் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன். இதன் ஆராய்ச்சியாளர் "டேன் ஜேம்ஸ், பெரு நாட்டை சேர்ந்தவர், மேலும் அமேசான் காட்டில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.


ஆனா ஒன்னு மக்கா!! இவங்கள பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. பின்ன இருக்காத, கரன்ட் பில், டெலிபோன் பில், வாட்டர் பில், காஸ் பில், பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி ஏற்றம் அப்படின்னு எந்த பிரச்சினையும் இல்ல. பிரேசில் அரசுக்கு ஒரே வேண்டுகோள் அவங்களையாவது நிம்மதியா வாழ விடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்!!

1 Response to "அமேசான் காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடிகள்"

Post a Comment