Showing posts with label அறிவியள்ளை பற்றி தெரிந்து கொள்வோம். Show all posts
Showing posts with label அறிவியள்ளை பற்றி தெரிந்து கொள்வோம். Show all posts

விண்டோஸ் 7 பேக் அப்

Author: முகேஷ் .M // Category:

நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும்.இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர்.முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.


இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும்.


நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும்.பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.


முதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும்.

கணினி பாகங்கள் மற்றும் படங்கள்

Author: முகேஷ் .M // Category:
பாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்…
கணினி என்றால் என்ன?
உள்ளீடு (Input) -->
செயல் (Process) -->
வெளியீடு (Output)
விசைபலகை (Keyboard)

எண்பலகை (Numeric Keyboard)

நகலாக்கி (Scanner)

தொடுதிரை (TouchScreen)

அளவீடும் கருவிகள்
(Measurement Equipments)

ஒலி கருவிகள்
(Audio Device)

ஒலி, ஒளி கருவிகள்
(Video Device)

இன்னபிற…
மைய செயலகம்

(Central Processing Unit)
( மைய செயலகம் பல்வேறு கருவிகளின் தொகுப்பு, அவற்றை விரிவாக பின்பு பார்ப்போம்.)
திரை (Monitor)

அச்சு கருவி (Printer)

இன்ன பிற…
உள்ளீடு கருவிகளின் படங்கள்
விசைபலகை அளவீடும் கருவிகள்
keyboard measurement
எண்பலகை ஒலி கருவி
numeric keyboard mic
நகலாக்கி ஒலி, ஒளி கருவி
scanner video
தொடுதிரை
touch screen
மைய செயலகம்
cpu
வெளியீடு கருவிகளின் படங்கள்
crt monitor lcd monitorprinterlaser printer

20 நிமிடங்களில் WINDOWS XP இன்ஸ்டால் செய்யலாம் !

Author: முகேஷ் .M // Category:

நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது .


1 .முதலில் WINDOWS XP CD மூலமாக கணினியை பூட் செய்து பணியை தொடங்குங்கள்
2.சில படிகளுக்கு பிறகு NTFS அல்லது FAT முறையில் FORMAT செய்வதற்கான கட்டம் வரும் .தேவையான கட்டளையை கொடுத்து FORMAT செய்யுங்கள் .அதன் பிறகு CD ல் உள்ள FILE கள் அனைத்தும் COPY ஆகும் .COPY ஆகி முடிந்தவுடன் கணினி RESTART ஆகும் .
3.இனிதான் ஒரு சிறிய வேலை இருக்கிறது .கணினி RESTART ஆகி INSTALLATION PROCESS தொடர ஆரம்பித்ததும் SHIFT+F10 அழுத்துங்கள் .இப்போது COMMAND PROMPT விண்டோ திறக்கும் .அதில் Taskmgr என TYPE செய்து ENTER அழுத்துங்கள் .
4 .இப்போது TASK MANAGER திறக்கும் .TASK MANAGER ல் PROCESS TAB ஐ தேர்வு செய்யுங்கள் .அதில் setup.exe என்பதை RIGHT CLICK செய்து SET PRIORITY என்பதில் HIGH அல்லது ABOVE NORMAL என்பதை தேர்வு செய்யவும் .இப்போது ஒரு எச்சரிக்கை வரலாம் .அதை கண்டுகொள்ளவேண்டாம் .
5.இனி TASK MANAGER ஐயும் COMMAND PROMPT ஐயும் மூடிவிட்டு INSTALLATION ஐ தொடரலாம் .
இப்போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவான நேரத்தில் WINDOWS XP INSTALL ஆகிவிடும் .

Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது.

Author: முகேஷ் .M // Category:
நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் 'Recovery partition உள்ளேயே இருக்கு' என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம்.


இப்படி Recovery Disc தரப்படவில்லை எனில் பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும்.


இந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம்.


இந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.

இந்த Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

சரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.

இதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால், இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம்.

முதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம்.

Start பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று PC Help & Tools மற்றும் Recovery Disc Creation ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள்.

Welcome திரையில் Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். Insert Blank Recordable disc திரை வரும் வரை Next பட்டனை க்ளிக் செய்து வாருங்கள்.
இப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள்.

Next பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள்.

முதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் "Recovery Disc 1 of 2" என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

இந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள்.

பெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.


அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, ரீஸ்டோர் செய்ய வேண்டுமெனில் இந்த DVD களின் மூலம் பூட் செய்து சரி செய்ய முடியும்.

ஜிபிஎஸ் எப்படி இயங்குகிறது?

Author: முகேஷ் .M // Category:


Global positioning system என்பதன் சுருக்கமான பெயர்தான் GPS. இதில் 24 செயர்க்கைக்கோள்கள் பங்கு எடுத்துகொள்கின்றன இவை அமெரிக்க மிலிட்டரி அப்ளிகேசன்களுக்காக அவர்களுடைய U.S.Department of defence மூலமாக ஆகாயத்தில் விடப்பட்டன. 1980களில் இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் மற்ற மக்களுக்காகப் பயன்பட அளிக்கப்பட்டது.

ஜிபிஎஸ் செயர்க்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளில் இரண்டு முறை வலம் வருகின்றன. அவை தங்களுடைய தற்போதைய இடத்தை எல்லா வேளையிலும் சிக்னல்கள் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கும். ஜிபிஎஸ் ரிசிவர்கள் இந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளும். பிறகு சிக்னல்கள் எந்த நேரத்தில் trasmit செய்யப்பட்டன ,எந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன ஒத்துப்பார்க்கும்.

அந்த இடைவெளி நேரத்தின் மூலம் ரிசிவருக்கு செயற்கைக்கோள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தெரிந்து விடும் . ஒரு ஜிபிஎஸ் ரிசிவர் 3 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைக்கோள்கள் மூலம் சிக்னல்கள் பெறுகிறது. பிறகு Triangulation என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ரிசிவர் இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு விடும். இதை ஒரு எலெக்ட்ரானின் படமாக டிஸ்ப்ளே செய்து விடும்.

ரிசிவருக்கு குறைந்தபட்சம் 3 செயர்க்கைகொல்களிலிரிந்து சிக்னல்கள் தேவைப்படும்.இதன் மூலம் இரு பரிணாமத்தில் இடத்தை ,அதாவது latitude மற்றும் longitude கணக்க்கிட்டுவிடும். 4 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைகொல்கள் மூலம் சிக்னல்கள் கிடைத்தால் ரிசிவர் அது எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும்.

பயனாளரின் இடத்தை தெரிந்த உடன் ரிசிவர் வேறு பல விசயங்களையும் கணக்கிட முடியும். சராசரி வேகம் எந்தத்திசையில் செல்கிறது நீங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு உள்ள தூரம் போன்றவை. ஜிபிஎஸ் ஒரு நாளில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். வெயிலோ ,மழையோ ,மேகம் இருக்கிறதோ .இல்லையோ , ஒற்றைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.எந்த இடத்திலும் இயங்கும்.

ஒரு விஷயத்தை மனதி கொள்ள வேண்டும். ரிசிவர் சிக்னல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் என்பதால் வீட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தால் அது வேலை செய்யாது. தண்ணீரின் அடியிலும் சிக்னல்கள் கிடைக்காது. மற்றபடி நிலத்திலோ நீரிலோ ஆகயத்திலோ எங்கு வேண்டுமானாலும் பயன்படுதிக்கொள்ளலாம்.

இன்று ஜிபிஎஸ் ரிசிவர்கள் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள எல்லா இடங்களுக்கும் வரைபடம் கிடைக்கின்றன. இவை இரண்டே சிடியில் வெளிவந்துள்ளது. தேவைப்பட்டும் படங்களை மட்டும் ஜிபிஎஸ் ரிசிவருக்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக நியுயார்க் செல்ல வேண்டும் என்றால் அந்த வரைபடத்தை மட்டும் ரிசிவரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பிறகு ஒரு புது நகரத்தில் வழி தெரியாமல் திண்டாடவேண்டாம். பிரயாணத்தை தொடங்கும் இடத்தையும் போய்ச்சேரவேண்டிய இடத்தையும் கொடுத்துவிட்டால் போதும். அதுவே வழியை காட்டிவிடும்."வாயில் இருக்கிறது வழி " என்பது போக இன்று "ஜிபிஎஸ் வழி காட்டும் " என்று கூரலாம்.

மேலும் தவறான பாதையில் நாம் சென்றாலும் நீங்கள் தவறான பாதையில் செல்கிரிர்கள் என்று சொல்லும் சிச்டம்களும் இன்று வந்துள்ளன. இவற்றை காரில் பொருத்திக் கொள்ளலாம். வழியில் சென்று கொண்டிருக்கும் போது எமர்சன்சியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அப்பொழுது அந்த இடத்தையும் இது காட்டும்.

மிலிட்டரி தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் இன்று ஒரு சராசரி குடிமகனுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது.

பாம்பு ஒயின்

Author: முகேஷ் .M // Category:

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும்.

பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனாலினால் விஷ தன்மையை முறித்துவிடும். கிழகத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம்முடையது என்பதால் இந்த விஷ பாம்பு ஒயின் கண்பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்பபடுகிறது. இதில் இரண்டு வகையான விஷ பாம்பு ஒயின் உள்ளது.

ஓன்று உடனடியாக அருந்துவதற்கு, அதாவது ஒரு மது பாட்டிலினுள் விஷ பாம்புகள் உயிருடன் அடைக்கபட்டு அதன் உடல் சாறாக பிழியபட்டு உடனடியாக அருந்துவது. இரண்டாவது முறையானது மது பாட்டிலினுள் விஷ பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியினங்கள் உயிருடன் அடைக்கபட்டு பலமாதங்கள் கழித்து குடிப்பது.

பச்சை நிறமாக மாறி ருக்கும் கனேடிய ஆறு

Author: முகேஷ் .M // Category:

கனடாவின் Goldstream Riiver திடீர் என்று பச்சை நிறமாக மாறி உள்ளது.கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி முதல் இம்மாற்றம் நேர்ந்து உள்ளது.சுற்றுலாப் பயணிகள் இந்நிற மாற்றத்தால் பெரிதும் கவரப்பட்டு உள்ளனர்.





நோயின் அறிகுறியை நகங்களின் மூலம் கண்டறியலாம்.

Author: முகேஷ் .M // Category:


நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இவை உண்மை தான்.

வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.

நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் பின்வருமாறு:

1. நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.

2. நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.

3. மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

4. நகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

5. நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

6. கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

7. நீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

8. நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

9. மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.

கடலில் மூழ்கும் துபாய் தீவுகள்

Author: முகேஷ் .M // Category:



palm_island_2-450x300.jpg (450×300)

துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

எனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்” படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.

Author: முகேஷ் .M // Category:



படத்தில் காணப்படும் தாவரம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகாலம் உயிர்வாழும் உயிரியாக இது கருதப்படுகிறது.

இதன் பெயர் Redwood Tree ஆகும். இது கலிபோர்னிய காடுகளில் காணப்படுகிறது. இதன் தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது.
கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் எடை சராசரியாக 2000 டன் என கணிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்”

Author: முகேஷ் .M // Category:

ஒரு பக்கம் என்னடான்னா, இன்னும் 100 வருஷத்துல உலகம் அழியப்போகுதுன்னு சின்னம்மை நோயை ஒழிச்சுக்கட்டின உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான, ஃப்ராங்க் ஃபென்னர் சொல்றாரு! அவரு சொல்றதுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு உலக வெப்பமயமாதல் மற்றும் உலக தட்ப வெட்ப மாற்றங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், பாதிப்புக்கள் குறித்த அன்றாடச் செய்திகள்!
இப்படித்தான், 2000-மாவது வருஷம் உலகம் அழியப்போகுதுன்னு வந்த பீதியை/புரளியை உண்மைன்னு நம்பி, நடந்த காமடி கூத்துகள், சில வன்முறைகள் பத்தி நாம செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிச்சு/பார்த்து இருப்போம். அதேமாதிரி சமீபத்துல, 2012 ஆம் வருஷம் உலகம் அழியப்போகுதுன்னு வந்த செய்தி/புரளியைப் பார்த்துட்டு, முன்னாடி செஞ்ச மாதிரியே காமெடிக்கூத்துகளையும், வன்முறைகளையும் செஞ்சோமுன்னா, அதைவிட பைத்தியக்காரத்தனமான/முட்டாள்தனமான விஷயம் வேற எதுவும் இருக்க முடியாது!
“ஆமா, இதையெல்லாம் இப்போ எதுக்கு நம்மகிட்ட சொல்றான் இவன்” அப்படீன்னு மனசுக்குள்ள நீங்க முனுமுனுக்கிறது எனக்கு நல்லாவே கேக்குதுங்க. அதாவது, உலகம் அழிவதற்க்கான ஆபத்துகளும், பாதிப்புகளும் ஒருபக்கம் நடந்துகிட்டு இருக்க அதை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது அப்படீன்னு மறுபக்கம் ஆய்வுகளும், சுற்றுச்சூழலை பாதிக்காத, இருக்கும் குறைந்த வசதிகளைப் பயன்படுத்தி அதிக நன்மைகளை பெறும் புதிய கண்டுபிடிப்புகளும் நடந்துகிட்டு இருக்குங்கிறத அவ்வப்போது மேலிருப்பானில் நீங்க படிச்சிருப்பீங்க…..
அந்த வரிசையில உலகின் தேவைகளை, சுற்றுச்சூழலையும் பாதிக்காமல், ஆனால் குறைந்த செலவில் அதிக நன்மைகளை அள்ளிதரக்கூடிய வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளின் துணையுடன், சிறிய அளவுடைய ஆனால் அதேசமயம் அதிகமான சக்தியை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அட்டகாசமான மின்கலத்தை (battery) வெற்றிகரமாக கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின், வாஷிங்டன் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானி ச்சூங் ஷிக் யூவும் அவரது துணை விஞ்ஞானிகளும்/மாணவர்களும்!
அந்த மின்கலத்துக்கு சூப்பர் மின்கலம்னு (Super battery) பேரு வச்சிருக்காங்க. அதுக்கு ஏன் அப்படியொரு பேரு, அந்த மின்கலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன, அதை எப்படி உருவாக்கினாங்க அப்படீன்னு பிரிச்சி மேயத்தான் இந்த பதிவு. வாங்க கெளம்புவோம்…..

சூப்பர் பேட்டரியும், சூப்பர் அதிக அழுத்தமும்!

முதல்ல இந்த புதிய மின்கலத்துக்கு ஏன் சூப்பர் பேட்டரி அப்படீன்னு ஒரு பேருன்னு கேட்டா, சூப்பர் அழுத்தம் (super-high pressures) கொடுத்து உருவாக்கப்பட்டதுனாலயும், அசாத்தியமான அளவு சக்தியை ஒரு சின்ன வடிவத்துக்குள்ள சேமித்து வைக்கக்கூடிய மின்கலம் இது என்பதாலேயும்தானாம்!
இந்த மின்கலத்தின் அடிப்படை என்னன்னா, இயந்திர சக்தியை () வேதியல் சக்தியாக () மாற்றி ஒரு பொருளினுள் சேமித்து வைக்க முடியும் என்பதுதான் என்கிறார் ச்சூங்! உதாரணத்துக்கு, அணு சக்தியை எடுத்துக்கொள்ளுங்கள். யுரேனியம் அல்லது ப்ளூடோனியம் அணுவுக்குள் ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய வேதியல் சக்தியை எப்படி சேமிக்க முடியுமோ அதேபோலத்தான் இந்த சூப்பர் மின்கலமும்!
ஐய்யய்யோ, அப்போ இந்த மின்கலமும் ஒரு அணுகுண்டு மாதிரியான்னு கேட்கக்கூடாது! ஏன்னா, இந்த மின்கலத்தின் தயாரிப்பு தத்துவம்தான் அணுகுண்டுக்கு சற்று ஒப்புமையுடையதே தவிர, சூப்பர் மின்கலத்துக்கும் அணுகுண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்க! சக்தி அளவினடிப்படையில் இந்த சூப்பர் மின்கலம் அணுசக்திக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது என்கிறார் ச்சூங்!
சூப்பர் பேட்டரி உருவானது எப்படி?

வைரத்தாலான ஆன்வில் செல் என்னும் (diamond anvil cell) ஒரு கருவி ஒரு சின்ன பகுதிக்குள் அசாத்திய அளவிலான அழுத்தத்தை (more than million atmospheres) ஏற்படுத்த வல்லது. இந்த கருவியினுள் செனான் டைஃப்லூரைடு (xenon difluoride (XeF2)) என்னும் வெள்ளை கட்டிகள் வடிவிலான வேதியல் பொருளை செலுத்தி, அளவுக்கதிகமான அழுத்தத்திற்க்கு (more than a million atmospheres) அந்த வெள்ளைக் கட்டிகளை உட்படுத்துவதன்மூலம், அவற்றிர்குள்ளிருக்கும் வேதியல் இணைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து உறுதியான முப்பரிமான வடிவத்திற்க்கு மாறிவிடுகிறது (tightly bound three-dimensional metallic “network structures”)! இந்த அளவிலான அழுத்தம் பூமியின் ஆழமான பகுதிகளில் இருக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது!
அதெல்லாஞ்சரி, இதனால நமக்கு என்ன பயன்?

இந்த வகையான வேதியல் பொருள்கள் மூலமாக, புதிய எரிசக்திகள், சக்தி சேமிக்கும் கலங்கள் (), ஆபத்தான வேதியல் மற்றும் உயிரியல் பொருள்களை அழிக்கவல்ல மருந்துகள் (super-oxidizing materials) மற்றும் அதிக வெப்ப சூப்பர் கடத்திகள் ( high-temperature superconductors) போன்ற பல்வேறு பொருள்களை உருவாக்கலாம் என்கிறார் விஞ்ஞானி ச்சூங்!
பரவாயில்லை, இந்த மாதிரியான புதிய பொருள்களின் வருகை இந்த உலகின் அத்தியாவசியத் தேவைகளான எரிசக்தி, மின்சாரம் போன்றவற்றை பூர்த்தி செய்ய, மனித வாழ்வை இன்னும் சுலபமாக்கினால் நல்லதுதானே?!
ஆமா, சூப்பர் பேட்டரி பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

மனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள்

Author: முகேஷ் .M // Category:

மனிதனின் குடலுக்குள் எவ்வளவு பாக்டீரியா இனங்கள் வாழ்கின்றன தெரியுமா? சொன்னால் ஆச்சரியத்தில் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்! சுமார் 1,000-1,500 இனங்கள் மனிதனின் குடலில் கூட்டமாய் வாழ்கின்றனவாம். மனிதனின் உடலில் சுமார் 100,000௦௦௦,000௦௦௦,௦௦௦000,000 செல்கள் உள்ளன. ஆனால் அதைப்போல் 10௦ மடங்குக்கும் மேலாக பாக்டீரியாக்கள் வீடுகட்டி குழந்தை குட்டிகளுடன் ஜாம் ஜாம் என்று குடித்தனம் நடத்துகின்றன. இவைகளில் 60% பாக்டீரியாக்கள் உலர்ந்த மலத்தில் காணப்படுகின்றன. இவைகளில் 99% காற்று இன்றியே சுவாசிக்கின்றன.

குழந்தை கருவாக‌ தாயின் கருவறையில் இருக்கும்போது பாக்ட்டிரியா அதன் குடலில் இருக்காது. குழந்தை பிறந்த பின்பே, தாயிடமிருந்தும், சுற்றுச் சூழலிலிருந்தும் அவை குழந்தையின் குடலுக்குள் நுழைகின்றன. இங்கே வசிக்கும் பாக்டீரியக்கள் குறைந்த நீளமுள்ள கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் செல்களின் வகைகளையும், பரவுதலையும் கட்டுப்படுத்துகின்றன. வேறு சில வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், உருவாக்கம் போன்றவைகளுக்கும், பயோடின் (Biotin) மற்றும் போலேட் (Folate) போன்ற வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகின்றன. மேலும் மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவைகளின் அயனிகளை உட்கிரகிக்கவும் பயன்படுகின்றன. முக்கியமாக, இவை ஒவ்வாமை ஏற்படாமல் நம்மை காக்கின்றன. தற்காப்புத் திறன் தடாலடியாக ரொம்ப மிகைப்படுத்தி செயல்படாமல் அவற்றை கட்டுக்குள் வைத்து நம்மை காப்பதுவும் இவைகளே. பாக்டீரியாக்கள் நமது மலக்குடல் மற்றும் மலப்புழை வியாதிகளை தடுக்கின்றன. வீக்கத்தை குறைக்கின்றன. ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் எதிர் உயரி மருந்துகள், இந்த பாக்டீரியாக்களை அப்படியே வழித்து எடுத்துவிட்டு நம்மை நிர்க்கதியாக்கி விடுகின்றன.

இங்கே பலப்பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. நாம் பாக்டீரியாவின் காலனி மேலதான் நடக்கிறோம் என பேராசிரியர் ஜெரோன் ராஸ் சொல்லுகிறார், இந்த மார்ச் மாத இயற்கை இதழில். மேலும் மனித உடலில் இருப்பதைப் போல 100 மடங்கு மரபணுக்களின் எண்ணிக்கை பாக்டீரியாவில் உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சுமார் 124 ஐரோப்பியர்களின் மலத்தின் மாதிரிகளை சோதனை செய்தனர். பின் அதிலுள்ள பாக்டீரியாக்களின் ஆயிரக்கணக்கான மரபணுக்களைப் பிரித்து மேய்ந்தனர். மரபணுவின் DNAக்களிலுள்ள வரிசைகளையும் கண்டறிந்தனர். அவை மனிதனின் மலத்திலும், குடலிலும் அவை ஒரு சூழல் மண்டலத்தையே உருவாக்கி வாழ்கின்றன என்ற தகவல் சமீபத்தில்தான், மார்ச் 4 ம் நாள், "இயற்கை" பத்திரிக்கையில் வெளியானது. இதிலுள்ள சுவையான, ஆச்சரியப்படும்படியான தகவல் என்னவென்றால், உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் குடலிலும், கிட்டத்தட்ட ஒரே வகை நுண்ணுயிரிகள்தான், அதாவது பாக்டீரியாக்கள்தான் வசிக்கின்றன. இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது என அறிவியல் உலகம் கருதுகின்றது. உலகின் அனைத்து மனிதர்களின் குடல், மலத்தை பாக்டீரியாக்கள் பாலமாக இருந்து இணைக்கின்றன என்பதுதான்.

குணத்தை மாற்றும் வைரசுகள்

Author: முகேஷ் .M // Category:

மனிதர்களின் குணத்தை யாராலும் மாற்ற முடியாது. இது பேக்டிரியாவின் குணத்தைப் பற்றியது. எசரிக்கியா கோலை எனும் பேக்டிரியா சாதுவானது. வழக்கமாக வெப்ப இரத்தப் பிராணிகளின் குடலில் வாழும். மனிதர்களின் குடலில் கட்டாயம் இருக்கும். இல்லாவிட்டால்தான் பிரச்சனை.

அபூர்வமாக சில எசரிக்கியா கோலை பேக்டிரியா கொடும் நோய்க்கிருமியாக மாறிவிடுவதுண்டு. இந்த கொடிய குணத்திற்குக் காரணம் இதனிடமிருந்து வெளிப்படும் ஷிகா என்றொரு விஷம். ஷிகா விஷம் குடலில் பட்டுவிட்டால் கடுமையான இரத்த பேதி ஏற்படும், சிலருக்கு சிறுநீரகம்கூட பாதிப்படைந்துவிடும். இத்தனை மோசமான குணம் இதற்கு ஏற்படுவதற்கு இதனிடம் வேண்டிய ஜீன்கூட இல்லை.

நம்மைத் தாக்குவதுபோல பேக்டிரியாக்களைத் தாக்குவதற்கென்று வைரசுகள் சில உள்ளன. பேக்டிரிய ஃபாஜ் என்று அவற்றைக் குறிப்பிடுவார்கள். இவை ஒரு பேக்டிரியாவிலிருந்து இன்னொன்றுக்கு பரவி வளரும்போது ஷிகா விஷத்திற்கான ஜீனையும் கொடுத்துவிட்டுச் செல்கின்றன. கெமில்லா சக்ஸ் என்ற பெண் தனது பி எச்டி பட்டத்திற்காக செய்த ஆராய்ச்சி மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. நார்விஜியன் கால்நடை மருத்துவப் பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது.

வாயில் வாழும் பாக்டீரியாக்கள்

Author: முகேஷ் .M // Category:


Mouthநமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?

ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.

உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா?

டெலஸ்கோப் உருவாகிய வரலாறு

Author: முகேஷ் .M // Category:

1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார்.

ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதா கோவிலை உற்று நோக்க தொடங்கினான். அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது . அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.

galileo_telescope_320ப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது. உடனே கலிலியோ (Galileo)அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்த கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ்கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.

தன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் (telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் (telescope) பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

லிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன.
telescope_320ந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. இத்தொலை நோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது.
து வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைத்துள்ளன. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .