Showing posts with label வேளாண்மை. Show all posts
Showing posts with label வேளாண்மை. Show all posts

தோட்டக்கலை காய்கறிப் பயிர்கள் தக்காளி

Author: முகேஷ் .M // Category:


இரகங்கள் : கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

விதைக்கும் காலம் : ஜீன் - ஜீலை, நவம்பர் - டிசம்பர், பிப்ரவரி - மார்ச்.
நடும் பருவம் : அக்டோபர் - நவம்பர், பிப்ரவரி - மார்ச், மே - ஜீன்.

விதையும் விதைப்பும்

விதை அளவு : எக்டருக்கு 350-400 கிராம் விதைகள்.

விதை நேர்த்தி : ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1 மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 ச.மீ வரிசை இடைவெளியில் விதைக்கவேண்டும். பிறகு மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். பின்பு பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுக்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்குமுன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிர்லா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

இடைவெளி

கோ 1, பையூர்

60x45 செ.மீ

கோ 2, பிகேஎம் 1

60x60 செ.மீ

கோ 3

48x35 செ.மீ

பூசாரூபி

80x75செ.மீ

நீர் நிர்வாகம்

நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரமான எக்டருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ இடவேண்டும். நட்ட 30ம் நாள் தழை்சசத்து 75 கிலோ இட்டு மண் அணைக்கவேண்டும். நாற்று நட்ட 15ம் நாள் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதினால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

பயிர்


இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)



தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா


தக்காளி

அடியுரம்

75

100

50

193

121

313

313

நட்ட 30ம் நாள்

75

0

0

0

163

0

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாகக் கலந்து நாற்று நடுவதற்கு முன்னர் நிலத்தில் தெளித்து நீாப் பாய்ச்சி பின்னர் நாற்றுக்களை நடவேண்டும். நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழுவைக் கட்டுப்படுத்த

  1. இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும்.
  2. தாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்கவேண்டும், வளர்ந்த புழுக்களையும் அழிக்கவேண்டும்.
  3. ஒரு எக்டருக்கு எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பரில் நனையும் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
  4. ட்ரைகோகிம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50,000 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதாரச் சேதநிலை அறிந்துவிடவேண்டும்.
  5. காய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்கவேண்டும்.
  6. புரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.

வேர் முடிச்சு நூற்புழு : கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும்.

நோய்கள்

நாற்று அழுகல் : விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு அல்லது கேப்டான் 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். நாற்றாங்காலில் நீர் தேங்கக்கூடாது. காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மருந்தை பாத்திகளில் ஊற்றவேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்: இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

இலைப்பேன்கள் : இது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும்.

அறுவடை

மகசூல் : 135 நாட்களில் ஒரு எக்டருக்கு 35 டன் பழங்கள்.

கோ.டி.எச் 1 வீரிய ஒட்டுத் தக்காளி

முன்னுரை

பருவம் : மே - ஜீன்

தக்காளியில் உயர் விளைச்சல் இரகங்கள் ஒரு எக்டருக்கு 30 முதல் 40 டன் வரை மகசூல் தரவல்லது. ஆனால் வீரிய ஒட்டு இரகங்களோ 90-100 டன் வரை மகசூல் தருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து கோடிஎச் 1 என்ற வீரிய ஒட்டுத் தக்காளி இரகம் வெளியிடப்பட்டுள்ளது. சராசரியாக இந்த இரகத்தில் இருந்து 90-96 டன் வரை மகசூல் பெறலாம். எனினும் கோடைக்காலத்திற்கு இந்த இரகங்கள் உகந்தது அல்ல. எனவே கோடையில் பயிர் செய்யக்கூடாது.



வயது

நடவிலிருந்து 110-115 நாட்கள்

பருவம்

மே - சூன், அக்டோபர் – நவம்பர்

மகசூல்

எக்டருக்கு 96 டன்

சிறப்பியல்புகள்

  • பழங்கள் சற்றே நீண்ட உருண்டையாகவும் நடுத்தர எடையுடனும் (50 கிராம்) காணப்படும்.
  • கொத்துக் கொத்தாகக் காய்க்கக்கூடியது.
  • பழங்கள் நல்ல புளிப்புடையவை.
  • செடிகளை 1 மீட்டர் உயரமுள்ள குச்சிகள் வைத்துக் கட்டி நிறுத்தவேண்டும்.
  • 60x45 செ.மீ இடைவெளி போதுமானது.

விதைக்கும் பருவம் - மே - சூன், அக்டோபர் - நவம்பர்
விதையளவு - எக்டருக்கு 159 கிராம்

விதையும் விதைப்பும்

விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா என்ற பூசணம் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கலந்து வைக்கவேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பாக 150 கிராம் விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்கவேண்டும்.

நாற்றாங்கால் : தொழு உரம், மணல், செம்மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து மேட்டுப்பாத்திகளை நிழலான பகுதியில் அமைக்கவேண்டும். இப்பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் கோடுகள் கிழித்து அதில் ஒவ்வொரு விதையாக விதைக்கவேண்டும். அல்லது சிறிய பிளாஸ்டிக் கோப்பைகளில் மண் கலவையை நிரப்பி அதில் ஒரு கோப்பைக்கு ஒரு விதை வீதம் விதைக்கவேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த தாமிர ஆக்சி குளோரைடு என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதைகளை முளைத்துவரும் பொழுதும், பின்பு 7 நாட்கள் கழித்தும் ஊற்றவேண்டும். விதைக்கும் பொழுதும், பின்பு 7 நாட்கள் கழித்தும் ஊற்றவேண்டும். விதைக்கும் போது சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கார்போஃபியான் குருணை மருந்தினை இடவேண்டும்.

நிலம் தயாரித்தல்

60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். பார்களின் இடையே நீர்ப்பாசனம் செய்து 25 நாள் வயதுள்ள நாற்றுக்களை வேர்களைச் சுற்றியுள்ள மண்ணுடன் தோண்டி எடுத்து பார்களின் ஒரு புறம் 45 செ.மீ இடைவெளியிவ் நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்து 3ம் நாளும் அதன் பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
நடவு செய்த 30ம் நாள் 1 மீட்டர் உயரமுள்ள மெல்லிய மூங்கில் குச்சிகளை செடிகளின் அருகில் நட்டு செடிகள் தரையில் சாய்ந்து விடாதவாறு கட்டவேண்டும். நடுத்தண்டில் தரையிலிருந்து 20 செ.மீ வரையில் முளைத்து வரும் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுழவின் போது எக்டருக்கு 26 டன் தொழு உரமிடவேண்டும். நடவு செய்யும் முன்பு எக்டருக்கு 2 கிலோ (10 பாக்கெட்) அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்ிகய தொழு உரத்துடன் கலந்து பார்களின் பக்கத்தில் இடவேண்டும். பின்பு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து, 250 கிலோ மணிச்சத்து, 250 கிலோ சாம்பல்சத்து என்ற விகிதத்தில் உரங்களை இடவேண்டும். 10 கிலோ போராக்ஸ் மற்றும் 50 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றையும் அடியுரமாக இடவேண்டும்.

பயிர்


இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்கு)

தக்காளி


தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

அடியுரம்

100

250

250

963

8

நட்ட 30ம் நாள்

50

0

0

0

109

நடவு செய்த 60ம் நாள்

50

0

0

0

109

மேலுரம்

  1. நடவு செய்த செய்த 30ம் நாள் எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து இட்டு மண் அனைத்து நீர் பாய்ச்சவும்.
  2. நடவு செய்த 60ம் நாள் மீண்டும் எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து இட்டு, மண் அணைத்து நிர்் பாய்ச்சவும்.

ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு

  1. நடவு செய்த 7 நாட்கள் கழித்து கார்போஃபியூரான் குருணையை எக்டருக்கு 7 கிலோ என்ற அளவில் இட்டு சாறு உறிஞ்சம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.
  2. மிதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் எக்டருக்கு 500 மில்லி மருந்து தெளித்து, இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
  3. இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 1 கிலோ ஜீனாப் அல்லது மேன்கோசெப் மருந்து தெளிக்கவேண்டும்.
  4. காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 1.25 லிட்டர் எண்டோசல்ஃபான் மருந்து அல்லது 1.25 கிலோ கார்பரில் நனையும் தூள் இதில் ஒன்றைத் தெளிக்கவெண்டும்.

அறுவடை

தக்காளிப் பழங்கள் சிகப்பாக மாற ஆரம்பிக்கும் பொழுது அறுவடை செய்யவேண்டும்.


கோதுமை பயிர் மேலாண்மை

Author: முகேஷ் .M // Category:





பயிர் மேலாண்மை

1.நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இருமுறையும், கொக்கி கலப்பைக் கொண்டு இரண்டு முதல் மூன்று முறை நன்றாக உழுதல் வேண்டும்.

2. எரு இடுதல்

மக்கிய தொழு உரம் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

3. பூஞ்சாணக் கொல்லியால் விதைநேர்த்தி

விதைப்பிற்கு 25 மணிநேரம் முன்னர், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது திரம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்யவேண்டும்.

4. பாத்திகள் அமைத்தல்

பாத்திகளை 10 அல்லது 20 சதுரமீட்டர் என்ற அளவில் அமைக்கவேண்டும். போதுமான பாசன வாய்க்கால்களை அமைத்திடல் வேண்டும்.

5. உரம் இடுதல்

மண் பரிசோதனை பரிந்துரைக்கேற்ப உரமிடுதல் வேண்டும் அல்லது பொது பரிந்துரையான எக்டருக்கு 80, 40, 40 கிலோ தழை, மணி, சாம்பல்ச் சத்துக்களை இடவேண்டும். தழைச்சத்தில் பாதியளவும், மணி மற்றும் சாம்பல் சத்துக்களில் முழுப்பகுதியும் அடியுரமாக இடவேண்டும்.

6. விதைப்பு

பாத்திகளில் அடியுரம் இட்ட பின்னர் 20 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை 5 செ.மீ ஆழத்தில் தொடர்ந்து விதைக்கவேண்டும். ஆழமாக விதைப்பதை தவிர்ப்பது நல்லது.

7. களைக் கட்டுப்பாடு

விதைத்த 3 நாட்களுக்கு பின்னர் எக்டருக்கு 800 கிராம் என்ற அளவில் ஐசோபுரோட்டுரான் என்ற களைக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும். விதைத்த 35 நாட்களுக்குப் பின்னர் கைக்களை எடுக்கவேண்டும். களைக்கொல்லியை தெளிக்கவில்லையெனில் விதைத்த 20வது மற்றும் 35வது நாட்களில் இரண்டு கைக்களை எடுக்கவேண்டும்.

8. நீர் நிர்வாகம்

நிலத்தின் தன்மை மற்றும் மழையைப் பொறுத்து நான்கு முதல் ஆறு முறை நீர் கட்டவேண்டும். கோதுமை பயிருக்கு கீழ்க்கண்ட 5 நிலைகளில் நீர்ப்பாசனம் தருவது அவசியம்.

நீர் கட்டவேண்டிய முக்கிய நிலைகள்

விதைத்த பின்


வேர் பிடிக்கும் நிலை

15-20 நாட்கள்

தூர் பிடித்தல்

35-40 நாட்கள்

பூக்கும் நிலை

50-55 நாட்கள்

மணி பிடிக்கும் நிலை

70-75 நாட்கள்

கோதுமையை பொறுத்தவரை வேர்பிடிக்கும் மற்றும் பூக்கும் தருணத்தில் நீர் கட்டுதல் மிக அவசியமாகும். முளைவிடும் தருணத்தில் தண்ணீர் தேங்கக்கூடாது.

9. மேலுரம் இடுதல்

வேர் பிடிக்கும் நிலையில் (15-20 நாட்கள்) மீதியுள்ள பாதியளவு தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.

10. அறுவடை

தானியங்கள் முற்றிய பிறகு மற்றும் தட்டை காய்ந்த பின்னர் அறுவடை செய்யவேண்டும். தானியங்களை பிரித்து தூற்றவேண்டும். செலவினை குறைக்க கதிரப்பானை தானியங்களை பிரிக்க மற்றம் சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்.



செம்மை நெல் சாகுபடி கோட்பாடுகள்

Author: முகேஷ் .M // Category:

இளநாற்று
(14 வயது நாற்றுகள்)
குத்துக்கு ஒரு நாற்று
சதுர நடவு
(25 X 25 செ.மீ.)

களைக்கருவி உபயோகித்தல்
காய்ச்சல் பாய்ச்சல் முறை நீர்ப்பாசனம்
இலைவண்ணஅட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை
நாற்றங்கால் மேலாண்மை


மண் கலவை
மண் கலவை கலைத்தல்

மரச்சட்டத்தில் மண் கலவையை நிரப்புதல்
முளைக் கடடிய விதையை தூவுதல்


நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து எடுத்தல்

நடவு வயல் தயாரித்தல்


சதுர நடவு
இள நாற்று நடுதல்

களை மேலாண்மை


நட்டதிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை ளைக்கருவியை குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல்

ஊட்டச்சத்து மேலாண்மை

DSC01965


இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வாகம்

செம்மை நெல் சாகுபடி முறை

  • பருவம் மழையற்ற வறட்சிப்பருவம் மிகவும் ஏற்றது.
  • அதிகமழை பெய்யக்கூடிய காலத்தில் பயிர் எண்ணிக்கையை நிலைக்கச்செய்வது சற்று கடினம், பொதுவாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்யும் கடற்கரை பகுதிகளில் நடவு செய்த முதல் இரண்டு வாரங்கள் சிரமத்தைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

இரகங்கள்

  • ஒட்டு இரகங்கள் மற்றும் அதிகம் தூர்கள் பிடிக்கும் இரகங்கள்

நாற்றங்கால் - புதிய பாய்நாற்றங்கால் தயாரிக்கும் முறை

  • நாற்றங்கால் தேர்வு செய்யப்படவேண்டும். நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் இருப்பது நல்லது.
  • ஒரு எக்டர் நடவு செய்ய 20x7.5மீ பரப்பளவுள்ள (150 ச.மீ.) நிலம் போதுமானது. நிலத்தில் வாய்க்காலைத் தவிர்த்து 100 ச.மீ. நிலமே நாற்றங்கால் ஆகும்.
  • உழுது சமன் படுத்தப்பட்ட நிலம், 120 செ.மீ. (5 அடி) அகலமுள்ள பாத்திகளாக 50 செ.மீ. இடைவெளியில் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு மண்ணை எடுத்து இருபுறமும் உள்ள பாத்திகளில் பரவலாக விசிறி சமன் செய்யப்பட்டு அமைக்கவேண்டும். பாத்திகளின் நீளம் 20 மீட்டராக (சுமார் 60 அடி) அமைதல் சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வதற்கு ஏற்றது.

மண் கலவை கலைத்தல்

  • அவ்வாறு உயர்த்தப்பட்ட பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்பி அதன்மீது நாற்றங்காலுக்கு மண் பரப்படவேண்டும்
  • பரப்புவதற்கான மண் வயல் மணணே போதுமானது. களினமண் விகிதம் அதிகம், இருப்பின் மணல் கலக்கவும், அதிகம் மணலாக இருப்பின் சற்று களிமண் கலக்கவும் அல்லது
  • மண் 70 சதம் + 20 சதம் நன்கு மக்கிய தொழுஉரம் ரூ 10 சதம் உமி அல்லது தவிடு இவற்றுடன் 15 கிலோ பொடியாக்கப்பட்ட டை அம்மோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ 17 17 17 காமளெக்ஸ் உரம் இட வேண்டும்.
  • நாற்றுப் பாத்திகள் அமைக்க மரச் சட்டத்தினால் தயாரிக்கப்பட்ட ‘கட்டளை’ தேவை. அக்கட்டளை 2 அங்குல உயரம் 1x1 மீ நிலம் அகலமோ அல்லது
    1x0.5 மீ நீலம் அகலமோ உள்ளதாய் அமைத்துக்கொள்ளலாம். அகலத்தில் குறுக்கே (50 செ.மீ. ஒர குறுக்குச் சட்டமும்) நீளவாக்கில் ஒவ்வொரு 20 செ.மீக்கு ஒரு சட்டம் வீதம் நான்கு சட்டங்கள் அமைத்து 20x50 சசெ.மீ. என்ற பாத்திகள் மொத்தம் 5x2x10 அமைக்கப்படலாம்.
  • கட்டளையை 1.2 மீ அகலமுள்ள பாத்தியின் மையத்தில் இருபுறமும்் 10 செ.மீீ. இடைவெளியில் வைத்து. தயாராக வைத்துள்ள மண் கொண்டு நிரம்பி, அழுத்தி, பின்னர் கட்டனையை உருவுதல் வேண்டும். அப்படிச்செய்யும்போது 10 நாற்று பாத்திகள் தயாராவதைக் காணலாம்.

மரச்சட்டத்தில்மண்கலவையைநிரப்புதல்

இவ்வாறு தேவையான நாற்றுப்பாத்திகள் அமைத்துக்கொள்ளவேண்டும்.முளை கட்டிய விதையை ஒரு சதுர மீட்டருக்கு 90 முதல் 100 கிராம் வரை சீராகத் தூவி மேலாக அழுத்தி விடவேண்டும் (100 கிராம் வரை விதை ஊறவைத்து பின்னர் 130 கிராம் எடை அடையலாம்).

விதை மீது சீராக மணல் தூவி அழுத்திய பின்னர் நீர் தெளிக்கவேண்டும். âவாளிகொண்டு நீர் தெளிப்பது நன்று. நீர் தெளிப்பது தேவைக்கேற்றவாறு அமையவேண்டும்.

  • ஒரு எக்டர் நடவு செய்ய 100 ச.மீ. நாற்றங்கால் அதாவது சுமார் 1000 நாற்றுப் பாத்திகள் (20x50 ச.செ.மீ.è 0.1 ச.மீ.) தேவைப்படும்.
  • ஒரு வாரத்திற்குப் பின்னர் நாற்று வளர்ந்து விட்ட நிலையில் வாய்க்காலில் நீர் நிரப்பும்போது, நீர் நாற்றின் அடிப்பகுதியில் நனைத்து தேவையான வளர் ச்சியைத் தரவல்லதாக அமையும்.
  • நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து முதல் வாரம் முடிந்த நிலையில் 0.5ு சதம் äரியா ரூ 0.5 ஜிங்சல்பேட் கரைசல் தெளிக்கப்படலாம்.
  • இவ்வகை நாற்று 14-15 நாட்களில் நடவு செய்வதற்கு தயார் பாத்திகள் ஒவ்வொன்றும் அடியோடு எடுத்துச் செல்லாம்.


நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து எடுத்தல்

நடவு வயல் தயாரித்தல்

  • நன்கு சேற்றுழவு செய்யப்பட்டு, மிகவும் சீரான முறையில் நடவு வயல் சமன் செய்யப்பட வேண்டும். நீர் நிர்வாகமே இம்முறை நடவின் சிறப்ப அம்சம், அச்சிறப்பை அடைவதற்கு சமன் செய்யப்பட்ட நிலம் மிகவும் அவசியம்.

நடவு செய்தல்

  • ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களை மண்ணின் மேற்பரப்பில் மேலாக வைக்கலாம் அல்லது மேலாக நடலாம்.
  • நடவு 22.5 x 22.5 செ.மீ (10 அங்குலத்திற்கு 10 அங்குலம்) என்ற அளவிற்கு வரிசையிலும், செடிக்குச்செடியும் அமையுமாறு நடுவது அவசியம்.
  • அவ்வாறு நடவு அமைய கயிற்றில் முடிச்சு ஒவ்வொரு 10 அங்குத்திற்கும் அடையாளம் வைத்து நடவு செய்யலாம் அல்லது சமன் செய்யப்பட்ட வயல் 10 அங்குலத்திற்கு கோடுகள் குறுக்காகவும் நெடுக்காகவும் ஏற்படுத்தி அதன்பின்னர் அக்கோடுகள் சந்திக்கும் இடங்களில் நடவு செய்து சரியான வரிசையை ஏற்படுத்தலாம். இவ்வகைக் கட்டங்கள் அமைக்க சிறிய எளிய கருவிகளும் பயன்படுத்தலாம்
  • நாற்றுக்கள் பாத்திகளிலிருந்து பிரித்த 30 நிமிடங்களுக்குள் நடவு செய்யப்பட வேண்டும்.
  • நடவு செய்தவுடன் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய பகுதிகளில் பயிரை நிலை நிறுத்த சிரமங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குத்துக்கு ஒரு நாற்று (சதுர நடவு)

நீர் நிர்வாகம்

  • மண் மறைய நீர் கட்டுதல் முதல் 10 நாட்களில் மிக முக்கியம்
  • அதன் பின்னர் 1 அங்குல உயரத்திற்கு ‘நீர் கட்டி மறைந்து’ மண்ணில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் அடுத்த முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். இம்முறை, âங்கதிர் உருவாகும் பயிர்ப்பருவம் வரை பின்பற்றப்படவேண்டும்.
  • âங்கதிர் உருவானதிற்குப்பின் 2 அங்குலம் அளவிற்கு நீர் பாய்ச்சி எட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்டிடவேண்டும்.


நீர் கட்டி மறைந்து பின் நீர்ப்பாய்ச்சுதல்

களை மேலாண்மை

  • நடவு வரிசையில் அமைக்கப்பட்டதால் களைகளை உருளைக் களை எடுப்பான் கொண்டு மண்ணினுள் அழுத்தி விடுதல் வேண்டும்.
  • உருளைக் களை எடுப்பானை முன்னும் பின்னுமாய் அசைத்து களை எடுப்பானை உருட்டி களையைக்களைவதுடன் மண்ணினுள் காற்று புகுமாறு உருட்டுவது பயிரின் வேரிற்கு நல்லது.
  • இவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே ஆரம்பிக்பப்படலாம். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.
  • பயிர்களுக்கு இடையே வேரிற்கு அருகில் உள்ள களைகளைக் களைய கைக்களை எடுப்பதும் அவசியமாகின்றது.

நட்டதிலிருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை ளைக்கருவியை குறுக்கும் நெடுக்குமாக உபயோகித்தல்

உர மேலாண்மை

  • நடவு முறை நெல் சாகுபடியைப் பார்க்கவும் (பகுதி 1,2,3)
  • தழைச்சத்து மேலாண்மைக்கு இலை வண்ண அட்டை (டுஊஊ) மூலம் முடிவு செய்தல், உரம் மற்றும் பணச்சிக்கனமும், மேன்மையான பயிர்வளர்ச்சியும் மகசூலும் தரவல்லது.
  • பொதுவாக இம்முறையில் பயிரிடும்பொழுது அடியுரமாக பசுந்தாள் உரமோ அல்லது தொழு உரமோ இடப்படுதல் நல்ல அகசூலைத் தரவல்லது.

இலைவண்ணஅட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை

  • மற்ற பயிர் நுட்பங்கள் நடவு முறைக்கு சொல்லப்பட்டது போன்றதேயாகும்