Showing posts with label கவிதைகள்... Show all posts
Showing posts with label கவிதைகள்... Show all posts

நட்பு...

Author: முகேஷ் .M // Category:



மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்

உன் நினைவுகளோடு

Author: முகேஷ் .M // Category:



ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்த்து விட்டு
திரும்பும் போது
உயிரற்ற உடலாய்
பயணப்படுகிறேன்……….

பேருந்துப் பயணங்களில்
பின்னோக்கி விரையும்
மரங்களைப் போல
உன்னை நோக்கித் தாவுது
என் மனக்குரங்கு …..
நிலவினைக் காட்டி
சோறூட்டும் அன்னை
விரலினை பிடித்துக் கொண்டு
அடங்கள் செய்யும்
சிறு குழந்தை போல
உன்
நினைவுகளில் தவழ்கிறது
என் மனக்குழந்தை …….
எனக்கு
உயிர் கொடுத்தாள் தாய்
என்
பேனாவிற்கு “உயிர்மை”
கொடுத்தவள் நீ…
கல்லூரிக் காலங்களில்
கன்னியரை மயக்க
கவிதைகள் புனைந்தேன் பல…
“கண்டதும் காதல்”-
காமக் கிளர்ச்சிகளை காதல் என
தப்பாக கற்பிதங்கள்
செய்து கொள்ளும்
வயது அது …
இது
உன்னை பற்றிய கவிதை
மட்டும் அல்ல
உண்மையை பற்றியதும் கூட…




என்
ஒவ்வொரு பயணத்தின் போதும்
எனை மறக்காமால்
எடுத்து வரச் சொல்லி
நீ
எழுதிக் கொடுக்கும்
பொருட்கள் பல..
ஆனால்
நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் …..
பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான்
உன்னை பிரிந்திருப்பதால் …
உன்னைக் காணும்
அந்த
ஒரு நாளிற்காக
ஒவ்வொரு நாட்களையும்
பிரயத்தனப்பட்டு
கடத்திக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு……

புதிதாய் பிறப்பேன்..

Author: முகேஷ் .M // Category:

இரண்டு முறை பிறந்தேன்..

என் தாய் மடியில்.. ஒருமுறை

உன் முதல் பார்வையில்.. மறுமுறை.

உன் வருகைகளே..

என் வயதை நிர்ணயித்தது..

உன் வருகைக்குப் பின்புதானே..

என் தேசத்தில் வசந்த காலம்..

என் பிறந்த நாளுக்காய்..

நீ ஊதி கட்டிய பலூனைக்கூட

இன்னும் உடையாமல்..

பத்திரமாய்..பாதுகாத்து.. வைத்திருக்கிறேன்..

உள்ளிருப்பது..

உன் மூச்சன்றோ??

ஒவ்வொரு பிறந்த நாளிலும்

நீ கவிதையுடன்..

நிரப்பி அனுப்பிய..

அந்த வாழ்த்து அட்டைகளை..

புத்தகத்து மயிலிறகாய்..

பெட்டியில் வைத்து..

ஒரு பள்ளிச்சிறுமியைப் போல..

தினமொருமுறை திறந்து பார்த்து குதூகலிக்கிறேன்..

என் செல்லக்காதலா..

உன் கவிதைகளுக்காகவே..

மறுபடியும்..

மறுபடியும்..

பிறக்கலாம்..

உலகில் பிறந்தது தவம்..

அது..

உனக்கெனப் பிறந்தது வரம்..

காதல் மந்திரம்

Author: முகேஷ் .M // Category:

பூஜையறையில்..

அம்மாவுக்கு..

சுப்ரபாதம்..

எனக்கு…

நீ எழுதிய கடிதம்..




பொருந்தா காதல்..?



ஊசிக்கும்…

பலூனுக்கும்…

.

கவலையுடன்…

காற்று.

அழகுக் கூட்டல்…

Author: முகேஷ் .M // Category:

நீ..
அழகையும் அழகையும்..
கூட்டி..
செய்த..
அழகுக் கூட்டல்.

நீ..
தேவதைகள் செய்ய
பிரம்மன் படைத்த..
மாதிரி தேவதை.

நீ..
அவைகளின் இனமாம்..
ரோஜாவும் மல்லிகையும்..
வழக்கு தொடுத்திருக்கிறது..
தங்களையும் அந்த அழகுப் பட்டியலில்
சேர்க்கச் சொல்லி.

நீ..
வாசலுக்கு அடிக்கடி..
வந்து போவதால்..
புலம்புகிறது நந்தவனங்கள்..
வண்டுகள் வந்து நாளாயிற்றாம்.

கொஞ்ச நேரம் வீட்டிற்குள் செல்லேன்..
உன் வாசல் சுற்றும் வண்டுகள்..
மறுபடியும் நந்தவனம் சுற்றட்டும்..

நீ..
நகர்வலம் போகிறாய்..
இலையுதிர் காலத்திலும்..
பூத்துக்குலுங்கும் சாலையோர மரங்கள்..

நீ..
எடை குறைக்க.. சென்ற
நடை பயணத்தில்..
எடையேறின பூங்காவின் பூக்கள்..

நீ..
சுவாசித்ததால்..
தென்றலாய் ஆனது புயல் காற்று…

நீ..
பேசுகிறாய்..
பேசும் பூவைக் கண்டு..
இமைக்க மறந்தன பூக்கள்..
வாயடைத்து நிற்கின்றன வண்டுகள்..

நீ..
தொட்டால்..
விரிகிறது தொட்டாச்சிணுங்கி..

நீ..
பேசும் சங்கீதத்தை..
எப்பொழுது கற்றுத்தருவாய்..
உன் வீட்டு மரக்கிளையில் தவமிருக்கும்
அதிகாலை குயில்கள்..

நீ..
குளக்கரையில்.
குளிக்க வந்ததாய் எண்ணி..
குதூகுலிக்கிறது குளம்..

நீ..
குளித்துவிட்டு வந்து ஆடைப்பெட்டி
திறக்கையில்
என்னைக் கட்டிக்கோ..
என்னைக் கட்டிக்கோ..
கேட்கிறதா புடவைகளின் கெஞ்சல்கள்?

நீ..
முகம் பார்க்கையில்..
வானமாகிவிடுகிறதடி..
கண்ணாடி..

நீ..
பூமியில் இருப்பது..
சூரியனுக்கும் தெரிந்துவிட்டதோ?
பாவம் 24 மணி நேரமும் பூமியை சுற்றுகிறது..

நீ..
இன்று குடை மறக்கவேண்டுமாம்..
மழையின் பிரார்த்தனை..

உன் பிறந்த நாளை..
அகில உலக தினமாய்..
இன்னும்..
அறிவிக்காததை கண்டித்து..
கண்டம் விட்டு கண்டம்..
கண்டனப் பேரணி செல்லும் பறவைகள்..

உன்னையும் காதலையும் அல்லாமல்..
நான் எழுதவேண்டுமாம்…

நீயும் காதலும் இல்லாமல்..
நானே இல்லை என்பதை
எப்படி இவர்களுக்கு புரியவைப்பது?

என்னைத் தாண்டி நீயும்
நம்மைத் தாண்டி காதலும்..
வாழ்வதைச் சொல்லவே..
இந்த
உனக்காவது புரிகிறதா?

மௌனச்சுவடுகள்

Author: முகேஷ் .M // Category:


வார்த்தைகளை

மௌனத்தினால் கட்டி வைத்திருக்கிறேன்

உன் மௌனத்தினால் அவிழ்த்து விடுவாயோ

என்ற அச்சத்துடன்..

வார்த்தைகளைத் தாண்டிய

மௌனத்தின் புரிதலில் இருக்கிறது

நம் காதலின் வசியம்..

இடைவெளிகளை

நிறைத்துச் செல்கின்றன

வார்த்தைகள்..

இடைவெளிகளை

குறைத்து செல்கின்றன

மௌனங்கள்..

கொஞ்சல் தாண்டிய

கூடலிலும்..

கூடல் தாண்டிய

ஊடலிலும்..

ஊடல் தாண்டிய

பிரிதலிலும்..

பிரிதல் தாண்டிய

கண்ணீரிலும்..

மௌனமாய்..

மௌனத்தின் சுவடுகள்..


பெண் கணிதம் – கவிதை

Author: முகேஷ் .M // Category:

..

உன்னையும் என்னையும் கூட்டி

காலம் நிருபித்த அன்புச் சமன்பாடு.

நீ.. நானென்றும்..

நான்.. நீயென்றும்..

நாம்.. ஒன்றென்றும்..

காலம்

ஒரு மாணவனாய்..

நம்மிலிருந்து…

காதல் தேற்றங்களை..

கற்றுக்கொள்கிறது

இலக்கில்லாமல்..

வட்டமடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தொடு கோடாய்

ஒரு காலப்புள்ளியில்

நீ தொட்டுப் போகும் வரை.

இன்று..

உன் பார்வைப் புள்ளிகளை..

மையம் கொண்டே…

என் வாழ்க்கையின் வட்டங்கள்.

வீட்டிற்கோ..

நான்

வெளி வட்டம்..

உனக்கோ

உள்(ன்) வட்டம்.

X – அச்சில் காலம்

Y – அச்சில் காதல்

நாம் சந்தித்த கணப் புள்ளிகளில்..

வாழ்க்கையை ஒரு வானவில்லாய்..

வரைந்து செல்கிறது..

வயது..

பக்கம் நீ,

தூரம் நான்..

தூரம் நீ,

பக்கம் நான்..

சோம்பலின்றி..

சுழலும்

பூமியில்

காலம் மாறியாய்…

மாறாக்காதல் மாறிலியாய்…


காதல் முத்தம்

Author: முகேஷ் .M // Category:

….

முத்தங்கள்..
இதழ்கள் பேசும்
தேன் மொழியா?
இல்லை..
கனி மொழியா?.

காதல் பேசும்..
தாய் மொழியும்..
முத்தம்தான்.

பேசும்..
முதல் மொழியும்..
முத்தம்தான்.

முத்ததின் மொழி..
மௌன மொழியா?
இல்லை..
வெட்க மொழியா?

என்னைப் போலவே..
உனக்காய்..
காத்திருக்கிறது..
என் முத்தங்களும்..




kiss

ஒரு விடுமுறை நாளில்…
வீடு வந்தாய்..
உள் முற்றத்தில்..
ஓடியவளை..
ஓர் நொடியில்..
இழுத்தணைத்து..
ஆளரவம் கேட்கும் முன்பே..
அவசர அவசரமாய்..
ஓடி மறைந்தாய்..

து.. முடிக்காத
அரைகுறை முதல் ..




சின்னதாய் ஒரேயொரு கேட்கிறாய்..
எனக்கு தெரியாதா..
ஒரு சின்ன முத்தத்தையும்..
பெரிய முத்தமாக்கும் வித்தை தெரிந்தவன் நீ..

எந்த முத்தம் இனிமையானது?
இதுவரை நீ கொடுத்துப்போன முத்தங்களா?
இல்லை
இனிமேல் நீ கொடுக்கப்போகும் முத்தங்களா?