100 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து .உயிர் தப்பிய அதிஷ்டக்கார இளைஞர்

Author: முகேஷ் .M // Category:

தான் வாழும் மாடி வீட்டுக் கட்டிடத் தொகுதியில் 100 அடி உயரத்திலிருந்து விழுந்து படுகாயமுற்ற போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இப்போது நடமாடக் கூடிய நிலைக்கு வந்துள்ளார் ஏன்ஜலோ நிக்கோர்டோ என்ற இளைஞர்.


22 வயதான இவர் ஒன்பதாவது மாடியிலிருந்து கொங்கிரீட் தளமொன்றில் விழுந்ததால் உடம்பின் 14 எலும்புகள் முறிந்து விட்டன.

ஏனைய பல எலும்புகளும் நிலைகுலைந்து விட்டன. கிறிஸ்மஸ் முடிந்த கையோடு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில்தான் இவர் தனது படுக்கையறையிலிருந்து விழுந்துள்ளார். விழுந்தது இவருக்கு ஞாபகத்தில் இல்லை.



பேர்மிங்ஹாம் ஆஸபத்திரியில்தான் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் உடலுக்குள் உலோகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இருந்தாலும் இப்போது கை தடியின் உதவியோடு நடமாட முடிகின்றது. ஆரம்பத்தில் இவர் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 20% மட்டுமே இருப்பதாக் டாக்டர்கள் கூறினர்.



ஆனால் இப்போது இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்து இந்தளவு காயமடைந்து உயிர் தப்பியவர்களை தமது அனுபவத்தில் கண்டதில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to "100 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து .உயிர் தப்பிய அதிஷ்டக்கார இளைஞர்"

Post a Comment