உணவே மருந்து

Author: முகேஷ் .M // Category:

உணவே மருந்து-பழங்களின் மகத்துவம்">உணவே மருந்து-பழங்களின் மகத்துவம்

பழங்களில் 9095%தண்ணீர்[water content] இருக்கிறது.பழங்ககளை நாம் தினமும் சேர்த்துக் கொள்ளும் பொழுது,நம் உடம்பிலிருந்து சிறுநீர் நன்றாக பிரிந்து[have diuretic effect]நம் உடம்பிலுள்ள கழிவுகள் நீங்கிவிடும்[removes toxins & nitrogenous wastes from the body].

செர்ரி பழங்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கங்களுக்கும்,மூட்டு சம்பந்தமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும்.

நார்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ளும் பொழுது,வயிறு சீக்கிரம் நிறைந்து விடுவதால் உடற் பருமனிலிருந்து தப்பிக்கலாம்.

பப்பாளியில் vit-A,C,D,Eமற்றும் anti oxidant அதிக அளவில் இருக்கிறது.இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்,LDL என்ற கெட்ட கொலஸ்டிராலை தடுக்க உதவுகிறது.

திராட்சை,செர்ரி,கிவி,நாவல் பழம் போன்றவை இதயநோய், ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கிறது.

கொய்யா,ஆரஞ்சு,நெல்லி,பைனாப்பிள் மற்றும் பப்பாளியில்,ஆன்டி ஆக்சிடன்டும்,VIT-C ம் நிறைந்திருக்கிறது.

வாழைப் பழத்தில் vit-B,C,மாங்கனீஸ்,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் இருக்கிறது.உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பொதுவாக பழங்களில் சோடியம்[sodium]குறைவாகவும்,பொட்டாஷியம் சத்து அதிகமாகவும் இருக்கும்.நாம் தினமும் நம் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் நம் ரத்தாழுத்தம் சீராக இருப்பதுடன் நம் இதயமும் நன்றாக செய்யும்.

என்ன நன்பர்களே ! தினமும் உணவில் ஏதேனும் ஒரு பழத்தையோ,பழக்கலவையையோ சேர்த்துக் கொள்வீர்கள் தானே….. ஹிட்ஸ் : 1929

ஆதி மனிதர்கள் காய்கனிகளை உண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.நாமோ உணவின் உன்னதத்தை உணராமல்,சமைத்தல் என்கின்ற பெயரில் சக்கையைத் தான் உண்கிறோம்.இட்லி ,தோசை,புட்டு,இடியாப்பம் என்ற நம் பாரம்பரிய உணவுகள் போய் பரோட்டா,பிஸ்சா,பர்கர்,நூடில்ஸ்,கோக்,பெப்ஸி என்று கண்டதையும் தின்று,குடித்து உடம்பு ஊதி[obesity],இளம் வயதிலேயே ரத்தகொதிப்பு[BP],சர்க்கரை [DIABETIC]போன்ற பல நோய்களுக்கு பலியாகிறோம்.

நான் என்னுடைய முந்தைய பதிவுகளிள் பழங்கள்,பச்சை காய்கறி,கீரை,முளைக்கட்டிய தானியங்கள்,பயறு வகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியிருக்கிறேன்.அந்தந்த பகுதிகளில்,அந்தந்த காலங்களில் பயிராகும் தானியம்,பழம்,கீரை,காய்கறிகளை உண்டு பயன் பெற வேண்டும்[make use of seasonal vegetables,fruits,etc.,].இப்பொழுது இந்த சீசனில் கிடைக்கும் வேர்க்[ground nut],காரட்டிலிருந்து[carrot] செய்முறை குறிப்பு தருகிறேன்.நீங்களும் அவற்றை பின் பற்றி பயனடையலாம்.

செய்முறை:கடலையை தோலுரித்து,24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.பின்பு ஒரு துணியில் இறுகக் கட்டி 24 மணி நேரம் தொங்கவிடவும்.

24 மணி நேரத்தில் முளை வந்துவிடும்.[பிஞ்சுக் கடலை முளைக்காது.நன்கு முற்றிய கடலையை பயன்படுத்தவும்].

பின்னர் முளைக்கட்டிய கடலையுடன்,வெல்லம்,சிறிது தேங்காய்த் துருவல்,ஏலக்காய் பொடி சேர்த்து உண்டு பாருங்கள்….மிக அருமையாக இருக்கும்.சுவையும் ,சத்தும் மிகுதியாக இருக்கும்.தீமை குறைவு.

கடலை மட்டுமன்றி அனைத்து வகை தானியங்கள்,பயறு வகைகளை முளைக்கட்டி உண்பது நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது.முளை விட்டதுமே தானிய நிலையிலிருந்து தாவர நிலையை அடைந்து நமக்கு கூடுதல் நன்மை பயக்கிறது.

வாரத்தில் ஒரு முறையேனும் இவ்வகை உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.காரட்டிலிருந்து இயற் உணவு செய்முறை குறிப்பை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உணவே மருந்து-சிறுகுறிஞ்சாக்கீரை">உணவே மருந்து-சிறுகுறிஞ்சாக்கீரை

கொடி வகையைச் சேர்ந்த குறிஞ்சாக்கீரையை சர்க்கரைக் கொல்லி என்றும் அழைப்பர்.பல நூற்றாண்டுகளாக நம் தமிழ் நாட்டில் ,சிறுகுறிஞ்சானை சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக இப்பொழுது சர்க்கரை நோயாளிகளிடம் இக்கீரை பிரபலமாகிக் கொண்டு வருகிறது.

மருத்துவ பயன்கள்:

இக்கீரையை தொடர்ந்து உட் கொள்ளும் பொழுது ,நம் உடம்பில் உற்பத்தியாகும் beta-cell-களின் எண்ணிக்கையை அதிகரித்து,ரத்தத்தில் இன்சுலின்[insulin]அளவைக் கூட்டி,சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிலிசரைடின் அளவையும் குறைக்கிறது.இக்கீரையின் மருத்துவ குணத்திற்கு இதில் உள்ள ஜிம்னிக் அமிலமே காரணமாகும்.

குறிஞ்சாக்கீரையை பருப்புடன் சேர்த்து மசித்தும் சூப் வைத்தும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவே மருந்து-வாழை">உணவே மருந்து-வாழை

முக்கனிகளில் ஒன்றான எக்காலத்திலும் எளிதாக கிடைக்கும்.வாழைக்காய்,கனி,பூ,தண்டு இவை அனைத்தும் உணவாகவும்,மருத்துவ ரீதியாகவும் பயன் படுகிறது.மேலும் மரத்தின் எல்லா பாகங்களும் எந்த காலத்திலும் நமக்கு மிகுந்த பலனை தருகின்ற காரணத்தால் கற்பக விருட்சமாகத் திகழ்கிறது.

வாழையின் மருத்துவ குணங்கள்:

*வாழையிலையில் சுடச்சுட உணவைப் பரிமாறி உண்ணும் பொழுது ,அதிலுள்ள பச்சையம்[chlorophyll]உணவுடன் சேர்ந்து ரத்தத்தில் கலந்து தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

*வாழைத்தண்டின் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல்[renal calculi],சிறு நீர்பாதையின் கிருமித் தொற்று மறையும்.

*100 கிராம் வாழைப் பழத்தில் 0.41.75கிராம் நார்ச்சத்து உள்ளது.உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணியான கொலஸ்டிராலை குடற்பகுதியில் தேக்கவிடாமல் தடுக்கிறது.எனவே உயர் உண்டாவது தடுக்கப்படுகிறது.

*மேலும் மலச்சிக்கல்,வாய்ப்புண்,தோல் நோய்கள்,தூக்கமின்மை போன்றவற்றுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த,”சொர்க்கத்தின் கனி” ‘FRUIT OF PARADISE’ என்று அழைக்கப்படும் வாழைப்பழத்தை நம் உணவில் தினமும் சேர்த்து கொள்வோம் ,பயன் பெறுவோம்.

நன்றி:வளரும் வேளாண்மை.

தொகுப்பு:diet-b

Tags : Tamil and tips on health foods in tamil.

, health tips, , டிப்ஸ், வாழை, , , benefits of ,

உணவே மருந்து_ப்ரூன்ஸ்[PRUNES]">உணவே மருந்து_ப்ரூன்ஸ்[PRUNES]

ப்ரூன்ஸ்னா என்ன?

ப்ளம்ஸ் !உங்க எல்லோருக்கும் தெரியும்.ப்ரூன்ஸ் ரொம்ப பேர் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.காயவைத்து பதப்படுத்தப்பட்ட யுரோப்பியன் ப்ளம்ஸ் தான் ப்ரூன்ஸ்.[ are dried version of plums.]நம்ம ஊர்ல எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.

ப்ரூன்ஸின் மருத்துவ குணங்கள்:

*ஒரு சில பழங்களைத்தான் super fruit என்று கூறுவர்.அந்த வரிசையில் ப்ரூன்ஸும் வருகிறது.ஏனெனில் இதில் இருக்கும் மருத்துவ குணங்களும்,antioxidants மற்றும் phytochemicals னால் தான்.

*இதில் அதிகளவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால்,சிறந்த மலமிளக்கியாக செயல் படுகிறது.[prevents constipation].

*தொடர்ந்து நம் உணவில் இப் பழத்தை சேர்த்துக் கொள்ளும் பொழுது,எலும்பின் அடர்த்தி [bone density]குறையாமல் வலுவாக இருக்கும்.இதில் இருக்கும் பொட்டாஷியமும்,போரானும் தான் எலும்பிற்கு பலம் சேர்க்கிறது.

*ரத்த சோகைக்கு [anemia]சிறந்த மருந்து.

*ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

*இதில் இருக்கும் பீட்டாகரோட்டீன் புற்று நோயிலிருந்து காக்கிறது.

*ப்ரூன்ஸில் கொழுப்புச்சத்து சுத்தமாக இல்லை.அதிகளவில் விட்டமிங்களும்,மினரல்ஸும் இருக்கிறது.தொடர்ந்து சாப்பிட்டால் முகம் நல்ல பொலிவுடன் காணப்படும்.தோலும் பளபளப்பாக இருக்கும்.

*இப்பழத்தை NUTRITION POWER HOUSE என்றும் கூறுவர்.இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இப்பழத்தை கண்டிப்பா உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

A PRUNE A DAY KEEPS AILMENTS AWAY.

மலைகள் சொல்லும் வரலாறுகள்

Author: முகேஷ் .M // Category:

கடற்கரையும், மலைப்பிரதேசங்களும் நாம் பூமி என்ற கிரகத்தில் வசிக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குகின்றன. அதிலும் மலைகள் வரலாறுகளை தனக்குள்ளாக பொதிந்து வைத்துள்ளன. "வாழ்க்கை கடற்கரையைப் போன்றதல்ல; அது மலைகளைப் போன்றது.." எனக் கருத்துரைக்கு ஆங்கில வாகசகம் ஒன்றுண்டு. ஆதிகால மனிதர்களின் வாழ்விடமாக திகழ்ந்த மலைகளில், அவர்கள் தீட்டிய ஓவியங்கள்,

எழுத்துக்கள், சிற்பங்கள் என்பன இன்றைக்கும் பழமையான வரலாற்றை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கலாச்சார, பண்பாட்டு தலைநகரமாக திகழ்கின்ற மதுரையை சுற்றி 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை தனக்குள் கொண்டிருக்கின்ற மலைகள் அதிகம். யானைமலை, திருப்பரங்குன்றம் மலை, பசுமலை, நாகமலை, பஞ்சபாண்டவர்மலை, அழகர்மலை, போன்ற குன்றுகளும் மலைகளுக்கும் இடையே இருக்கின்ற நகரமாக மதுரை உள்ளது.

சிலமாதங்களுக்கு முன்னால் யானை மலையை சிற்பநகரமாக்குகிறோம் என்ற பெயரில் கிரானைட் முதலாளிகள், தொன்மைவாய்ந்த மலைகளை பணம் கொழிக்கும் இடமாக பார்க்க தொடங்கினார்கள். இதற்கு பொது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒருபகுதியாக இலக்கியவாதியும், சமூகஆர்வலருமான எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், பசுமை பயணம் என்ற பெயரில் மதுரையை சுற்றியுள்ள மலைகளுக்கு, சமுகஆர்வலர்கள் , இயற்கைவிரும்பிகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த பயணத்தில், இணைந்து கொண்டபோது கிடைத்த விவரங்களில் அறிந்தவைகள் இங்கே..

பஞ்சபாண்டவர்மலை

பஞ்சபாண்டவர்மலை தமிழரின் வரலாற்றை சொல்கிற பொக்கிஷமாக உள்ளது. மதுரையிலுருந்து கம்பம் செல்லும் சாலையில் 15- கீமி தொலைவில் உள்ள கொங்கர் புளியங்குளத்தில் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர்மலை. இந்த மலையில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர்பள்ளி உள்ளது. மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் சமணர்கள்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த குகையில் 50க்கும் மேற்ப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன. இந்த குகையின் முகப்பில் இன்றைய தமிழ்மொழியின் தொடக்ககால எழுத்து வடிவங்களில் ஒன்றான தமிழி எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'குறகொடுபிதவன் உபாச அன் உபறுவ(ன்), குறுகொடல்கு ஈத்தவன் செய் அதன் ஒன், பாகன் ஊர் பே(ர)தன் பிடன் இத்தவெபோன் ' என சமணபள்ளியை உருவாக்கியவர்களின் பெயர்கள் அவை.

இந்த எழுத்துக்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. குகையின் மறுபுறத்தில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரரின் புடைப்பு சிற்பம் உள்ளது. சிற்பத்தின் அருகிலேயே தமிழின் மற்றொரு எழுத்துவடிவமான வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.அதில் அந்த சிற்பத்தை செதுக்கியவரான அச்சணத்தி சமணமுனிவரின் பெயர் காணப்படுகிறது. இங்கு வாழ்ந்த சமணர்கள் நிர்வானக்கோலத்திலேயே வாழ்ந்ததால் அமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஊருக்கு வெளியே இருந்த மலைகளிலேயே வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்ந்த மலைகளுக்கு அருகில் இருக்கின்ற கிராம மக்களுக்கு கல்வி, மருத்துவம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் இவற்றை கற்க்கொடுப்பவர்களாக, ஆலோசகர்களாக இருந்தார்கள் .மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்த வைதிகமதம் கல்வியை பரவலாக்க மறுத்தது.

அமணர்களும்- சமணர்களும்

சமணம் என்பதே பாலி மொழி வார்த்தை. மகாவீரரின் போதனைகளை பின்பற்றுகின்ற சமணர்களுக்கும், பஞ்சபாண்டவர்மலையில் வாழ்ந்தாக கூறபடுகின்ற சணர்களுக்கும் சம்பந்தமில்லை. பஞ்சபாண்டவர்கள் மலையில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள் மரபை சார்ந்தவர்கள், சமணர்கள் இல்லை. இவர்கள் அமணர்கள், ஊருக்கு ஒதுக்குபுறங்களில் வாழ்ந்தவர்கள். அனால் மகாவீரரை பின்பற்றிய சமணர்கள் அரசர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். சமணர்களுக்கும் சைவமதத்தை சேர்ந்த திருஞானசம்பந்தருக்கும் , வரகுணபாண்டிய மன்னனின் வெப்புநோய் (உடல் முழவதும் கொப்புளங்கள் தோன்றுவது) குணபடுத்துகிற நிகழ்வில் தோற்றுபோன சமணர்கள் 8000 பேரை மதுரையில் கழுவேற்றபட்டதாக (கழுமரம்- _ பென்சில் போன்ற கூர்மையான மரத்தில் ஆசணவாயில் அமரவைக்கபட்டு உடல் கனம்காரணமாக உடல் இருகூறுகளாக பிளந்து பலியாவது) வரலாறுகள் உண்டு. மதுரைக்கு அருகில் இன்றும் இருக்கிற சாமநத்தம் என்ற ஊரின் பெயர் சமணர் ரத்தம் என்பதிலிருந்த மறுவிய பெயராகும். இவர்களின் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு. பஞ்சபாண்டவர்கள் மலையில் வாழ்ந்த சித்தர்களின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு என்பது சில வரலாற்று அறிஞர்களின் கருத்து. பஞ்சபாண்டவர்மலை என்ற பெயரே வைதிக மதம் பிற்காலத்தில் சூட்டிய பெயராகும்.

தமிழகம் முழுவதும் இது போன்ற வரலாறு சொல்கின்ற மலைகள் உள்ளன. இவை தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, மொழிகளின் வரலாற்றை தனக்குள் கொண்டிருக்கின்றன.சில நூறு ஆண்டுகள் பழமையானதையே பொக்கிஷமாக பாதுகாக்கும் வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது தமிழர்கள் 2000 ஆண்டுக்கும் மேல் பழமைவாய்ந்த தனது வரலாற்றை பாதுகாப்பதில் அக்கறை குறைவாகவே உள்ளது. கடந்தகால வரலாறுகள் தான் ஒருசமுகத்தை உருக்குலையாமல் பாதுகாக்கும். எனவே தனது பழமையை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் முக்கிய கடமையாகும். அப்போது தான் தமிழ்மொழியையும்,தமிழ்சமுகத்தையும் பாதுகாப்பது சாத்தியமாகும்.

படவிளக்கம்

படம் 1. பஞ்சபாண்டவர்மலை

படம் 2. கற்படுக்கைகள்

படம் 3. தமிழி எழுத்துக்கள்

படம் 4. முத்துக்கிருஷணன்

படம் 5. மகாவீரரின் புடைப்பு சிற்பம்.

சூரிய ஒளியில் இயங்கும் கணினி

Author: முகேஷ் .M // Category:

கணினியை சூரிய ஒளி மூலம் இயக்கும் கணினி இந்தியாவிலும் வந்துவிட்டது. சிம்ற்றோநிக்ஸ் செமிகண்டுக்டோர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த முயற்சியை எடுத்து உள்ளது.இந்த பயன்பாட்டின் மூலம் சூரிய ஒளி யை சேமித்து கொண்டு, கணினி 3 அல்லது நாள் வரை கணினியை நாம் இயக்கலாம். லினக்ஸ் இயங்குதளத்துடன் இந்த கணினி கிடைகிறது. இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமான தொழில்நுட்பமாகும். இந்தியாவில் இதன் விலை 29,999 அகும். இதன் முலம் கார்பன் எமிசன் என்று சொல்லக் கூடிய, சுற்றுபுர சுழலுக்கு பாதுகாப்பான ஐ டி துறையின் ஒரு பங்கயை இது எடுத்து உள்ளது. இந்தியாவில் நிறைய இடங்களில் மின் தடை இருபதால், இந்த கணினி பயன்படும். இந்த வசதி அனைத்து துறையிலும் மின் சிக்கனத்தை உருவாக்கி தரும்.

75 லட்சம் ரூபாய்க்கு நோக்கியா மொபைல்

Author: முகேஷ் .M // Category:

75 லட்சம் ரூபாய்க்கு நோக்கியா மொபைல்

ஆடம்பரம். போதை தரக்கூடிய விசயம்தான். தேவைக்கு அதிகமாய் பணம் கொட்டி கிடக்கும் போது அதை விட்டெறிந்து தன்னைத்தானே திருப்தி படுத்தி கொள்ள உதவும் ஒரு மருந்து என்றும் கூறலாம்.

ஆடம்பர விரும்பிகளை குறிவைத்து உலகமெங்கும் பல வியாபாரங்கள் நடந்து வருகின்றன. அதை அந்த கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார், இதை இந்த கோடீஸ்வரர் ஏலம் எடுத்தார் என்று ஊடகங்களில் காண முடிகிறது. இவர்களை குறி வைத்து வர்த்தக நிறுவனங்கள் லிமிட்டெட் எடிசன் (Limitted Edition) என்று தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துவர். இவற்றை வாங்கி உபயோகிப்பது பெருமை என்ற எண்ணம் நிலவுகிறது.

கார்களில் இது போன்ற லிமிட்டெட் எடிசன் தயாரிப்புகளை கண்டிருக்கிறேன். இணையத்தில் உலவி கொண்டிருந்த போது நோக்கியா நிறுவனத்தின் மொபைல் ஒன்று லிமிட்டெட் எடிசனாக மொத்தம் மூன்று மட்டும் வெளியிடப்பட்டுள்ள செய்தியை கண்டேன். அதன் பெயர் நோக்கியா சுப்ரீம்.



12.5 காரட் பிங்க் வைரங்கள், 1225 பவளங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நடுவில் உயர்தர 3 காரட் சிங்கள் கட் வைரம் பதிப்பட்டு உள்ளது. மொத்தத்தில் 83 கிராம் பிளட்டினத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது குறித்த மேலும் விவரங்கள் இந்த சுட்டியில் உள்ளன.

உலக அளவில் இந்த மொபைல் மூன்றே மூன்று மட்டும் வெளியிடப்பட்டு உள்ளதால், இதை வாங்கினால், உங்களை தவிர இந்த மொபைலை உலகில் இருவர் மட்டுமே வைத்து இருப்பார். இது தான் இதன் பெருமை (!?) . இதன் விலை இந்திய ரூபாயில் 75 லட்சம் மட்டுமே.

ஆன்லைனில் வாங்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். வாங்கினால், இந்த மொபைலுக்கே தனியே ஒரு பாதுகாப்பு படை நியமிக்க வேண்டுமே!

வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள்

Author: முகேஷ் .M // Category:

வக்கிரக் கண்களாய் மாறும்

கேமரா

செல்போன்கள் !">

technology-how-to-take-great-photos-on-y
செல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் !

பத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.

இந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.
அதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.

சக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது

இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
தனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.

போதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.
இன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.

இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.

சில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.

நவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

x
நம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?

1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.

3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்கள்.

4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.

5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.

8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.

9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.
10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.
11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் !
12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.

13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.

14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.
எல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.