இரண்டு முறை பிறந்தேன்..
என் தாய் மடியில்.. ஒருமுறை
உன் முதல் பார்வையில்.. மறுமுறை.
உன் வருகைகளே..
என் வயதை நிர்ணயித்தது..
உன் வருகைக்குப் பின்புதானே..
என் தேசத்தில் வசந்த காலம்..
என் பிறந்த நாளுக்காய்..
நீ ஊதி கட்டிய பலூனைக்கூட
இன்னும் உடையாமல்..
பத்திரமாய்..பாதுகாத்து.. வைத்திருக்கிறேன்..
உள்ளிருப்பது..
உன் மூச்சன்றோ??
ஒவ்வொரு பிறந்த நாளிலும்
நீ கவிதையுடன்..
காதல் நிரப்பி அனுப்பிய..
அந்த வாழ்த்து அட்டைகளை..
புத்தகத்து மயிலிறகாய்..
பெட்டியில் வைத்து..
ஒரு பள்ளிச்சிறுமியைப் போல..
தினமொருமுறை திறந்து பார்த்து குதூகலிக்கிறேன்..
என் செல்லக்காதலா..
உன் கவிதைகளுக்காகவே..
மறுபடியும்..
மறுபடியும்..
பிறக்கலாம்..
உலகில் பிறந்தது தவம்..
அது..
உனக்கெனப் பிறந்தது வரம்..
0 Responses to "புதிதாய் பிறப்பேன்.."
Post a Comment