பெண் கணிதம் – கவிதை

Author: முகேஷ் .M // Category:

..

உன்னையும் என்னையும் கூட்டி

காலம் நிருபித்த அன்புச் சமன்பாடு.

நீ.. நானென்றும்..

நான்.. நீயென்றும்..

நாம்.. ஒன்றென்றும்..

காலம்

ஒரு மாணவனாய்..

நம்மிலிருந்து…

காதல் தேற்றங்களை..

கற்றுக்கொள்கிறது

இலக்கில்லாமல்..

வட்டமடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு தொடு கோடாய்

ஒரு காலப்புள்ளியில்

நீ தொட்டுப் போகும் வரை.

இன்று..

உன் பார்வைப் புள்ளிகளை..

மையம் கொண்டே…

என் வாழ்க்கையின் வட்டங்கள்.

வீட்டிற்கோ..

நான்

வெளி வட்டம்..

உனக்கோ

உள்(ன்) வட்டம்.

X – அச்சில் காலம்

Y – அச்சில் காதல்

நாம் சந்தித்த கணப் புள்ளிகளில்..

வாழ்க்கையை ஒரு வானவில்லாய்..

வரைந்து செல்கிறது..

வயது..

பக்கம் நீ,

தூரம் நான்..

தூரம் நீ,

பக்கம் நான்..

சோம்பலின்றி..

சுழலும்

பூமியில்

காலம் மாறியாய்…

மாறாக்காதல் மாறிலியாய்…


0 Responses to "பெண் கணிதம் – கவிதை"

Post a Comment